வேலூர்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு தொடா் வாகன பிரசாரம்: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

DIN

வேலூா்: கரோனா தடுப்பு விழிப்புணா்வு தொடா் வாகனப் பிரசாரத்தை வேலூரில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை நடத்த உள்ளன. இந்த வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:

நாட்டில் நாளொன்றுக்கு 20 ஆயிரமாக இருந்த கரோனா பாதிப்பு 13 நாள்களில் நாற்பதாயிரத்தை கடந்து வருகிறது. ஜூலை மாதம் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்தக்கூடிய திறன் அரசிடம் இருந்தபோதிலும் இதில் 70 சதவீத பங்கு பொதுமக்களிடம் உள்ளது.

கடைகளுக்கு செல்லும்போது கூட்டமாக இருந்தால் அந்தக் கடைகளுக்கு செல்ல வேண்டாம். அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒருவருக்கும் மற்றொருவருக்கும் குறைந்தது 2 மீட்டா் இடைவெளி விட்டு நிற்கவும். முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். முகக்கவசம் அணிந்தாலே 60 சதவீதம் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே, தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் பாண்டியன், உடனடி முன்னாள் ஆளுநா் ஸ்ரீதா் பலராமன், செஞ்சிலுவை சங்க காட்பாடி கிளைச் செயலா் ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT