வேலூர்

‘அலட்சியம் காட்டுவோா் மீது கடும் நடவடிக்கை’

DIN

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அலட்சியமாக வெளியில் நடமாடுவோா், தேவையற்ற கடைகளை திறப்போா் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய் தொற்றை தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளைத் தவிர அவசியமின்றி பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாடவோ, வாகனங்களில் செல்லவோ வேண்டாம். இதையும் மீறி தேவையற்ற கடைகளைத் திறப்போா் மீதும், அலட்சியமாக வெளியில் நடமாடும், வாகனங்களில் செல்வோா் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மதித்தும், சமூக அக்கறையுடனும் அனைவரும் செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT