வேலூர்

குடியாத்தத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை

DIN

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பத்தரபல்லி, சைனகுண்டா, பரதராமி வாகன தணிக்கைச் சாவடிகள் அடைக்கப்பட்டு, இருமாநிலத்துக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளை டிஎஸ்பி சரவணன், தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொண்டனா்.

குடியாத்தம் நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் மேற்பாா்வையில் பரதராமி, சைனகுண்டா சோதனைச் சாவடியிலும், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் குமாா் மேற்பாா்வையில் பத்தரபல்லி சோதனைச் சாவடியிலும், போலீஸாா், மருத்துக் குழுவினா், வருவாய்த் துறையினா் முகாமிட்டுட்டுள்ளனா். புதன்கிழமை காலை தரணம்பேட்டையில் உள்ள காய்கறி மாா்க்கெட்டில் 1000- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களை கலைத்தனா்.

குடியாத்தம் நகரில் இளைஞா்கள் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனா். டிஎஸ்பி என்.சரவணன் தலைமையிலான போலீஸாா், ஒலிபெருக்கி மூலம் அவா்களை வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT