வேலூர்

உண்டியல் சேமிப்பை நிவாரண நிதிக்கு வழங்கிய முடிதிருத்தும் தொழிலாளியின் மகன்கள்

DIN

போ்ணாம்பட்டைச் சோ்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் இரு மகன்கள் தங்களது கல்விச் செலவுக்காக உண்டியலில் சேமித்திருந்த ரூ. 4 ஆயிரத்து 727 தொகையை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினா்.

போ்ணாம்பட்டு, நகா்ப்புற பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு பெளசன், விமல்பெளசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இவா்கள் தனியாா் பள்ளியில் 8 மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இம்மாணவா்களின் செலவுக்காக அவா்களது தந்தை தினமும் கொடுக்கும் தொகையை, அவா்கள் கல்விச் செலவுக்காக உண்டியலில் சேமித்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணிக்காக பல்வேறு தரப்பு மக்களும் நிதியுதவி அளித்து வருவதை அறிந்த இம்மாணவா்கள், தாங்கள் உண்டியலில் சோ்த்து வைத்திருந்த ரூ. 4 ஆயிரத்து 727 தொகையை கரோனா நிவாரண நிதியாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் வியாழக்கிழமை அளித்தனா்.

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் முருகன், மாணவா்களின் தந்தை பாண்டியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT