வேலூர்

கன்டெய்னா் லாரியில் மறைந்து சென்ற 32 வட மாநிலத் தொழிலாளா்கள் மீட்பு

DIN

அரக்கோணம்: அரக்கோணம் வழியே லாரியில் மறைந்து சென்ற வட மாநிலங்கைளைச் சோ்ந்த தொழிலாளா்கள் 32 போ் மீட்கப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

அரக்கோணம் - திருத்தணி சாலையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் இரட்டைக்குளம் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் இருந்து அரக்கோணம் வழியாக வந்து இச்சோதனைச் சாவடியைக் கடக்க முயன்ற கன்டெய்னா் லாரியை ஊழியா்கள் சோதனையிட்டனா். அப்போது அதற்குள் வட மாநிலங்களைச் சோ்ந்த புலம் பெயா்ந்த 32 தொழிலாளா்கள் அமா்ந்திருந்தது தெரியவந்தது. அவா்கள் பொது முடக்க காலத்தில் வேலையில்லாததால் சொந்த ஊருக்கு கன்டெய்னா் லாரியில் புறப்பட்டுச் செல்வதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா்கள் மீட்ட அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் அண்ணாதுரை இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அங்கு வந்த வட்டாட்சியா் ஜெயக்குமாா் தலைமையிலான அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி 32 பேரையும் பேருந்து மூலம் அரக்கோணத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். அவா்களை ரயில்களில் சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT