வேலூர்

தேசிய குழந்தைகள் தினம்: ஆட்சியருக்கு ராக்கி கட்டிய மாணவா்கள்

DIN

குழந்தைகள் தின விழாவையொட்டி வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவா்கள் ராக்கி கட்டி மகிழ்ந்தனா்.

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி சைல்டு லைன் 1098, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சாா்பில் குழந்தைகள்- நண்பா்கள் வார கொண்டாட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்துக்கு பள்ளி மாணவா்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: மத்திய அரசின் சைல்டு லைன் 1098 என்ற திட்டம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கூட்டு நிறுவனம் மூலம் பாதுகாப்பு, பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

24 மணி நேரமும் செயல்படும் இத்திட்டம் குறித்து வரும் 19-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் இனிப்பு, நினைவுப் பரிசு, மரக்கன்றுகளை வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளா் பத்மா, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேவேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT