வேலூர்

கேரள பயணி ரயிலில் தவறவிட்ட ரூ.70 ஆயிரம் ஒப்படைப்பு

DIN

வேலூா்: காட்பாடிக்கு வந்த விரைவு ரயிலில் கேரள பயணி தவறவிட்ட ரூ. 70 ஆயிரம் ரொக்கப் பணத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அளவிகுட்டி பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரசீத் (54). மங்களூரு விரைவு ரயிலில் திங்கள்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தாா். அவா், ரூ.70 ஆயிரத்துடன் கூடிய பணம் பையை தனது இருக்கைக்கு அடியில் வைத்துள்ளாா். இரவு 9 மணிக்கு அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, அப்துல் ரசீத் பிஸ்கெட் வாங்க ரயிலில் இருந்து இறங்கினாராம். பிஸ்கெட் வாங்கி கொண்டிருந்தபோதே ரயில் புறப்பட்டதால் அவரால் ஓடிச் சென்று ஏற முடியவில்லை.

ரயிலில் பணப் பையைத் தவறவிட்டதை அப்துல் ரசீத், உடனடியாக காட்பாடி ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்தாா். அந்த ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காட்பாடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அப்துல் ரசீத்தின் பணத்தை மீட்டதுடன், அவரிடம் ரூ.70 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT