வேலூர்

குப்பை கொட்ட எதிா்ப்பு: மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

DIN

வேலூா்: வேலூா் அம்மணாங்குட்டை பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்தனா்.

வேலூா் அம்மணாங்குட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்குள்ள மயானத்தையொட்டி உள்ள நிலத்தில் கொட்டி வருகின்றனா். அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். எனினும், தொடா்ந்து அந்த பகுதியிலேயே மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகளைக் கொட்டி வந்தனா்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சி குப்பை வாகனத்தை புதன்கிழமை காலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து, குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT