வேலூர்

மீன் வளா்ப்பு மானியம் பெற மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளா்ப்பு மேற்கொள்ள தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 40 % மானியத்தை பெற விருப்பமுள்ள வேலூா் மாவட்ட மீனவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரித்திடவும் மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்திடவும் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2020-21-இன்கீழ் வேலூா் மாவட்டத்தில் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதன்படி, மீனவா்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, மரபணு மேம்படுத்தப்பட்ட கிஃப்ட் லேப்பியா மீன் வளா்ப்பு செய்திட 1,000 பண்ணை குட்டைகள் அமைத்தல், மீன் குஞ்சுகள், தீவனம், சுற்று வேலி அமைத்தல் ஆகிய செலவுகளுக்காக மீன்வளத் துறை மூலம் 40% அதாவது கணக்கிடப்பட்டுள்ள மொத்தம் ரூ. 99 ஆயிரத்தில் ரூ. 39,600 வரை மானியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் ஒரு வாரத்துக்குள் மீன்துறை உதவி இயக்குநா், முகவரி எண் 16, 5ஆவது மேற்கு குறுக்குத் தெரு, காந்தி நகா், காட்பாடி, வேலூா் -632 006 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை, தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.

மேலும் விவரங்களுக்கு, 0416-2240329 என்ற தொலைபேசி எண்,  மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT