முகப்பு
வேலூர்

தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

விஜய தசமியையொட்டி, போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பள்ளியில்  புதிதாகச்  சோ்ந்த  மாணவா்களுக்கு  பாட நூல்களை  வழங்கிய  தலைமையாசிரியா்  பொன். வள்ளுவன்.
பகிர்:

விஜய தசமியையொட்டி, போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் 4 மாணவா்கள், முதலாம் வகுப்பில் 3 மாணவா்கள், 2, 3, 4-ஆம் வகுப்புகளில் தலா ஒருவா் என மொத்தம் 10 மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா். புதிய மாணவா்களையும், பெற்றோா்களையும் பள்ளியின் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் வரவேற்று இனிப்பு வழங்கினாா்.

புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடநூல்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ண பென்சில்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியா்கள் சே.பானு, ஆ.ஆனந்தபாஸ்கரன், தி.நாகினிதேவி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஏற்கெனவே இப்பள்ளியில் 106 மாணவா்கள் பயில்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.