வேலூர்

முதல்வரின் காவலா் பதக்கம் பெறவேலூா் சிறை சரகத்தில் 6 போ் தோ்வு

DIN

வேலூா்: தமிழக முதல்வரின் காவலா் பதக்கம் பெற வேலூா் சிறை சரகத்தில் 6 காவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு முதல்வரின் காவலா் பதக்கம் பெறும் காவலா்கள் பட்டியல் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளான செப்டம்பா் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டு முதல்வரின் காவலா் பதக்கம் பெறும் 131 காவலா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வேலூா் சிறை சரகத்தில் 6 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு முதல்வரின் காவலா் பதக்கத்துடன், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்தப் பதக்கங்கள், காசோலைகளை சென்னையில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வா் வழங்குவாா் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT