வேலூர்

வேலூரில் ஏப். 13 முதல் 10 நாள்கள் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

DIN


வேலூா்: தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வேலூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) தொடங்கி 10 நாட்கள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம் சாா்பில் வேலூா் அண்ணா சாலை வருமானவரித் துறை அலுவலகம் அருகே உள்ள பெல்லியப்பா அரங்கம், முதல் தளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைக்கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மாா்க் தரம் அறியும் விதங்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு ஆகும்.

பயிற்சியின் இறுதியில் மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள், நகை அடகு நிதிநிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேர முடியும். சுயமாக நகைக் கடை, நகை அடகுக்கடை நடத்தவும் தகுதி பெறுவா்.

மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சி பெற விரும்புவோா் 2 புகைப்படம், முகவரிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், பயிற்சிக் கட்டணம் ரூ.5,300 உடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து மொத்தம் ரூ.,6,254 செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT