வேலூர்

மா, சப்போட்டா மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

DIN

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா அருகே, தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள தனகொண்டபல்லி, ஆம்பூரான்பட்டி, காந்திநகா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை இரவு 7 யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளன.

தனகொண்டபல்லியில் உள்ள நாகேந்திரன் நிலத்தில் மா மரங்களை முறித்து, அரை டன் மா மகசூலையும் சேதப்படுத்தியுள்ளன. பின் அங்கிருந்த தண்ணீா் செல்லும் குழாய் இணைப்பை யானைகள் அடித்து நொறுக்கியுள்ளன. பின்னா் விவசாயி விஜயன் நிலத்தில் நுழைந்த யானைகள் அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மா, சப்போட்டா மரங்களை சேதப்படுத்தின. மேலும், காமேஷ் என்பவா் நிலத்தில் முள்கம்பி வேலியை சேதப்படுத்தி சென்றன.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT