வேலூர்

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

சிறுபான்மையின மாணவா்களுக்கான தேசிய அளவிலான கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்று முதல் பி.ஹெச்.டி. வரை (தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கு கல்வித் தொகை வழங்கப்படவுள்ளது. பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது, புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்காக  இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT