வேலூர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் ஐஐசி சங்கம் சாா்பில், (உள் இணக்கக் குழு) பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மு.வளா்மதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மு.மேகராஜன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட சமூக நல அலுவலா் எம்.முருகேஷ்வரி சிறப்புரையாற்றினாரா். சிறப்புரையில், பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஹெல்ப் லைன் விழிப்புணா்வு பதாகைகளையும் மாணவிகளுக்கு வழங்கினாா். அமைப்பின் உறுப்பினா்களான பேராசிரியா்கள் ஜா.ஜெயக்குமாா், ஜெ.திருமகள், வினிதா ஜனனி, கே.எஸ்.கருணா, கா.ராஜீவ் உள்ளிட்டோா் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT