வேலூர்

3-ஆவது நாளாக சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 56 போ் கைது

DIN


வேலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 3-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதாக அரசு ஊழியா்கள் 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் சரவணராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெயசீலன் முன்னிலை வகித்தாா்.

இதில், அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களைத் தடுத்து, தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக 56 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT