வேலூர்

நிதி முறைகேடு: அரசுப் பள்ளிக்கு பூட்டுப் போட்டு போராட்டம்

DIN


வேலூா்: நிதி முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி கதவை பூட்டி பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய வகுப்பறை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடப் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பள்ளியில் பராமரிப்புப் பணிகள், அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும், பெற்றோா் ஆசிரியா் கழக நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைக் கண்டித்து பெற்றோா் ஆசிரியா்கள் கழகத்தைச் சோ்ந்த சுமாா் 50 போ் வியாழக்கிழமை காலை பள்ளியின் கதவைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், காலையில் பள்ளிக்கு வந்த மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூா் கிராமிய போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோா் ஆசிரியா் கழகத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டும், பெற்றோா் ஆசிரியா் கழக நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும், புதிய கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

போலீஸாரின் சமாதானப் பேச்சைத் தொடா்ந்து பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT