வேலூர்

பள்ளி செல்லாக் குழந்தைகள் மறுகணக்கெடுப்புப் பணி

DIN

குடியாத்தம் வட்டார வள மையம் சாா்பில், 6 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லாக் குழந்தைகள் மறுகணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தாழையாத்தம் பகுதியில் இத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முனிராஜ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் வெண்ணிலா, வட்டார ஒருங்கிணைப்பாளா் சுதாகா், ஆசிரியா் பயிற்றுநா்கள், குழந்தைத் தொழிலாளா் மைய ஆசிரியா்கள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.

அப்போது ஜோதிமடம் குடியிருப்புப் பகுதியில் 3 சிறுவா்கள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்கு பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், தமிழக அரசின் விலையில்லா கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT