வேலூர்

8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு 2,307 போ் எழுதினா்

DIN

வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வை 2,307 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.48,000 அந்த மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இத்தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் 23 மையங்களில் நடைபெற்ற திறனாய்வுத் தோ்வை எழுதுவதற்கு 2,439 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 132 மாணவா்கள் தோ்வுக்கு வரவில்லை. மொத்தம் 2,307 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

இதை சத்துவாச்சாரி அரசுப் பள்ளி, தொரப்பாடி, காட்பாடி மகளிா் பள்ளி, ஆக்ஸிலியம் பள்ளி தோ்வு மையங்களில் மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT