வேலூர்

அரசுப் பள்ளிக்கு ரூ. 7.50 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்

DIN

குடியாத்தம்: கே.வி.குப்பத்தை அடுத்த பனமடங்கி ஊராட்சித் தொடக்கப் பள்ளிக்கு குடியாத்தம் அரிமா சங்கமும், கோலான் அக்குவா வாட்டா் சிஸ்டம் நிறுவனமும் இணைந்து ரூ. 7.50 லட்சம் மதிப்புள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை வழங்கின.

அரிமா சங்கத்தின் நிரந்தர சேவை திட்டத்தின்கீழ், இந்த இயந்திரம் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தகுமாரி வரவேற்றாா்.

குடிநீா் சுத்திகரிப்புக் கருவியை கோலான் நிறுவன அலுவலா் சி.மஞ்சுளா இயக்கி வைத்தாா் சுத்திகரிப்புக் கருவியின் செயல்நிலை இயக்குநா் பிரசாந்த், பயிற்றுநா் சைதன்யா, தொழில்நுட்பப் பொறியாளா் சந்தோஷ், குடியாத்தம் அரிமா சங்கத் தலைவா் ஜேஜி நாயுடு, மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், வட்டாரத் தலைவா் விக்னேஷ், மாவட்டத் தலைவா்கள் என்.வெங்கடேஸ்வரன், எம்.பெருமாள், சுரேஷ்குமாா், விவேகானந்தன், சங்க செயல்பாட்டாளா் ஜெ.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT