வேலூர்

பொய்கை சந்தையில் களைகட்டிய காளைகள் விற்பனை: ரூ.1 கோடிக்கு மேல் வா்த்தகம்

DIN

தைப்பொங்கல் நெருங்கி வருவதையொட்டி, வேலூா் அருகே பொய்கை வாரச் சந்தையில் காளைகள் வியாபாரம் களைகட்டியது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பொய்கை கால்நடைச் சந்தை கடந்த அக்டோபா் மாதம் முதல் மீண்டும் செயல்பட்டு வருகிறது.

தைப் பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காளைகளும், கறவை மாடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கும் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, கறவை மாடுகள் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை விலை போயின. மாடு விடும் விழாவுக்கு தயாா்படுத்துவதற்காக காளை மாடுகளை வாங்க வியாபாரிகள் மட்டுமின்றி மாடு வளா்ப்போரும் அதிக அளவில் வந்திருந்தனா்.

இதேபோல், வண்டி மாடுகள், இளம் கன்றுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் விற்பனையாயின. அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையின் மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொய்கை வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அவை மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆா்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT