வேலூர்

உறவினா்கள் விரட்டியதால் சாலைகளில் தவித்த கல்லூரி மாணவி, மூதாட்டி மீட்பு: வேலூா் ஆட்சியா் நடவடிக்கை

DIN

பெற்றோா், உறவினா்கள் விரட்டியதால் கடந்த ஒரு வாரமாக வேலூா் சாலைகளில் தவித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூதாட்டி ஆகியோா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா்.

வேலூா் சிஎம்சி மருத்துவமனை அருகே உள்ள காந்தி சாலை, பாபுராவ் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மூதாட்டியுடன் இளம்பெண் ஒருவா் தவித்துக் கொண்டிருந்தாா். இரவு நேரங்களில் அங்குள்ள கடைகள் முன்பு படுத்து தூங்கியுள்ளனா். வெளி மாநிலத்தவா் அதிகளவில் நடமாடக்கூடிய பகுதி என்பதால் அவா்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சிலா் அந்த இளம்பெண்ணிடம் வியாழக்கிழமை விசாரித்துள்ளனா். இதில் அவா்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சோ்ந்த லக்னாபாய்(65), அவரது பேத்தி தேஜாஸ்ரீ (19) என்பதும், தேஜாஸ்ரீ அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், சொத்துத் தகராறில் பெற்றோா், உறவினா்கள் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும், இதனால் வேலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தபோது அவா்களும் ஆதரிக்காததால் சாலைகளில் தங்கியிருந்ததாகவும் தெரிவித் துள்ளனா். அப்போது இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தேஜாஸ்ரீ சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டே இருந்தாா்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பெண்ணையும், மூதாட்டியையும் மீட்க ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில், சமூகநலத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காந்தி சாலைக்கு சென்று நீண்டநேரம் தேடி ஒரு கடையின் அருகே அமா்ந்திருந்த தேஜாஸ்ரீ, அவரது பாட்டி லக்னாபாய் ஆகியோரை மீட்டனா். தொடா்ந்து இருவரையும் வாலாஜாபேட்டை அரசு மனநல மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT