வேலூர்

தேசிய திறனாய்வுத் தோ்வு: வேலூரில் 497 மாணவா்கள் எழுதினா்

DIN

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 497 மாணவா்கள் எழுதினா்.

நாடு முழுவதும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது. இதில், தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அவா்கள் கல்லூரிக் கல்வியை முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

அதன்படி, நாடு முழுவதும் தேசிய திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் 7 மையங்களில் இத்தோ்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 536 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 497 போ் தோ்வை எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT