முகப்பு
வேலூர்

8 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல்

குடியாத்தத்தை அடுத்த அகரம்சேரி அருகே 8 டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த அகரம்சேரி அருகே 8 டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

தகவலின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலா் காமராஜ், குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, வருவாய் ஆய்வாளா் ஜோதிராமலிங்கம் உள்ளிட்டோா் சனிக்கிழமை அகரம்சேரி அருகே ரோந்து சென்றனா். அப்போது அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரியை சோதனையிட்டனா். அதில் 183 மூட்டைகளில் 8 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மா்ம நபா்கள் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்ப்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

லாரி, உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.