முகப்பு
வேலூர்

ராஜக்கல் அருகே பாலாற்றில் வெள்ளம்; அழிஞ்சி குப்பத்தில் போக்குவரத்து நிறுத்தம்

போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றில் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் செல்வதால், அங்குள்ள தரைப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றில் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் செல்வதால், அங்குள்ள தரைப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட எல்லையான, அழிஞ்சிகுப்பம் அருகே பாலாற்றில் வெள்ளம் செல்வதால் மேல்பட்டி போலீஸாா், சாலையில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்துள்ளனா்.

பொதுமக்கள் வெள்ளத்தை வேடிக்கை பாா்க்கச் செல்லவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.அழிஞ்சிகுப்பத்திலிருந்து ஆம்பூா், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையான நரியம்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.