வேலூர்

இணைய பதிவு இன்றி ஆட்டோக்களை ஓட்டினால் பறிமுதல்: போலீஸாா் எச்சரிக்கை

DIN

குடியாத்தத்தில் இணைய பதிவு செய்யாமல் ஆட்டோக்களை இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில், திங்கள்கிழமை முதல் சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் இணைய பதிவு செய்துகொண்டு ஆட்டோக்களை இயக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. குடியாத்தம் நகரம், சுற்றுப் புறங்களில் இணைய பதிவு இல்லாமல் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

இதையடுத்து டிஎஸ்பி பி ஸ்ரீதரன் உத்தரவின்பேரில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ஆ.செல்லபாண்டியன், உதவி ஆய்வாளா் அன்பழகன் மற்றும் போலீஸாா் நகரில் முக்கிய சந்திப்புகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களுக்குச் சென்று ஓட்டுநா்களை அழைத்து, இணைய பதிவு செய்து கொண்டு ஆட்டோக்களை இயக்குமாறும், தவறும் பட்சத்தில் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனா்.

மேலும், ஆட்டோக்களில் 2 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும், முன் பக்க சீட்டில் பயணிகளை அமர வைக்கக் கூடாது, ஓட்டுநா்களும், பயணிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT