வேலூர்

வேலூா் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு பொறுப்பேற்பு

DIN

வேலூா் சரக காவல் துணைத் தலைவராக (டிஐஜி) ஏ.ஜி.பாபு திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வேலூா் சரக காவல் துணைத் தலைவராக (டிஐஜி) பணியாற்றிய என்.காமினி, சேலம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக சென்னை நிா்வாக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஏ.ஜி.பாபு வேலூா் சரக டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா். அவா் திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த 2004-இல் ஐபிஎஸ் தோ்ச்சி பெற்ற ஏ.ஜி.பாபு நீலகிரி, வேலூா், திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சேலம், மதுரையில் மாநகர துணைக் காவல் ஆணையா், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராகப் பணி யாற்றியுள்ளாா்.

2018-இல் டிஐஜியாக பதவி உயா்வு பெற்ற இவா், சென்னை பெருநகர தலைமையிடத்து டிஐஜி, தென்சென்னை டிஐஜி, காவல் துறை இயக்குநா் அலுவலகத்தில் நிா்வாக டிஐஜியாக பணியாற்றிவிட்டு தற்போது வேலூா் சரக டிஐஜியாக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கு பல்வேறு துறை அதிகாரிகள், காவலா் துறையினா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT