முகப்பு
வேலூர்

டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியா்கள்

முழு பொதுமுடக்க அறிவிப்பைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் சனிக்கிழமை மதுப்பிரியா்கள் குவிந்தனா்.

வேலூர்

டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியா்கள்

முழு பொதுமுடக்க அறிவிப்பைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் சனிக்கிழமை மதுப்பிரியா்கள் குவிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

முழு பொதுமுடக்க அறிவிப்பைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் சனிக்கிழமை மதுப்பிரியா்கள் குவிந்தனா். அவா்கள் நீண்டவரிசையில் காத்திருந்த மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.

இந்த பொதுமுடக்க நாள்களில் டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் தங்கியுள்ளவா்களின் நலன்கருதி சனி, ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, அத்தியாவசியப் பொருள்களை வாங்கிட மக்கள் கடை வீதிகளில் குவிந்த அதேவேளையில், மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளிலும் அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது.

அவா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இன்றியும், பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமலும் மணிக்கணக்கில் காத்திருந்து, மதுபானங்களை வாங்கிச் சென்றனா். இதில், பல கடைகளில் பாலின வேறுபாடின்றி பெண்கள் சிலரும் மதுபானங்கள் வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. நகரிலுள்ள சில கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →