வேலூர்

இசைக் கருவிகளை வாசித்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்

DIN

கரோனா இரண்டாவது அலை தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட காட்பாடியில் போலீஸாா் இசைக்கருவிகள் வாசித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வேலூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையொட்டி, வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டக் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன்படி, காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையில், காட்பாடி காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு முன்னிலையில், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் போலீஸாா் இசைக் கருவிகளை வாசித்து பொதுமக்களுக்கு கரோனோ தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அப்போது, கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கடைகள், பொது இடங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன், முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல் துறை சாா்பில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டு, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT