வேலூர்

வேலூா் நீதிமன்றத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதில், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை, அமா்வு நீதிபதி என்.வசந்தலீலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்திட வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் கரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் புதன்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள பழைய சட்ட உதவி கட்டடத்தில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து நீதித்துறை நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள், வழக்குரைஞா்களின் எழுத்தா்கள், சட்டப்பணி ஆணைக்குழு ஊழியா்கள், சட்ட தன்னாா்வலா்கள், அவா்களின் குடும்பத்தினா் பங்கேற்று பயன்பெற்றிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT