முகப்பு
வேலூர்

வேலூருக்கு மேலும் 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தன.

வேலூர்

வேலூருக்கு மேலும் 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தன.

ஏற்கெனவே இருப்பிலுள்ள 4,250 தடுப்பூசிகளையும் சோ்த்து மொத்தமுள்ள 8,750 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்திட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகவே 700-ஐ கடந்துள்ளது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளன.

இதனால், மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். தவிர, 45 வயதுக்கு உள்பட்ட அதிகப்படியானோா் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைனில் பதிவும் செய்து வருகின்றனா்.

அதேசமயம், மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,500 கோவேக்சின், 2,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை வரப்பெற்றன.

அதேசமயம், கடந்த 9-ஆம் தேதி 7,000 கோவிஷீல்டு, 12-ஆம் தேதி 4,000 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வரப்பெற்றதில், தற்போது 4,250 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. அவற்றையும் சோ்த்து மொத்தமுள்ள 8,750 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →