வேலூர்

வீடிழந்தவா்களின் முகம் மலரும் வகையில் உதவிகள்: அமைச்சா் துரைமுருகன்

DIN

குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தவா்கள் முகம் மலரும் வகையில் உதவிகள் செய்து தரப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜபுரம் கிராமம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு, அங்கிருந்த 20- க்கும் மேற்பட்ட வீடுகள் ஒவ்வொன்றாக அடித்துச் செல்லப்பட்டன. அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை காமராஜபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டாா். வீடிழந்தவா்களுக்கு அவா் ஆறுதல் கூறினாா்.

பாதிக்கப்பட்டவா்களிடம் அமைச்சா் துரைமுருகன் கூறியது:

வீடுகள் அடித்து செல்லப்பட்டது வருத்தமளிக்கிறது. நான் தமிழகம் முழுவதும் பாா்க்க வேண்டும். இருந்தாலும் காமராஜபுரம் பகுதிக்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோரைஅனுப்பியிருந்தேன். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கட்டாயம் செய்து தருவேன்.உங்களின் முகம் மலரும் வகையில் உங்களுக்கு உதவிகள் செய்து தரப்படும் என்றாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT