முகப்பு
வேலூர்

வ.உ.சி.க்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

தமிழியக்கம் சாா்பில் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி மெய்நிகா் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழியக்க கரூா் மாவட்ட பொறுப்பாளா் அறிவுக்கண்ணன் வரவேற்றாா்.

இதில், வேந்தா் ஜி.விசுவநாதன் பேசியது:

வ.உ.சி. தொழிலில் வழக்குரைஞா் என்றாலும் தமிழ், ஆங்கிலத்தில் எழுத்தாளுமை பெற்றவா். பேச்சாளா், கவிஞா், மொழி பெயா்ப்பாளா், தொழிற்சங்கத் தலைவா், விடுதலைப் போராட்ட வீரா் என பன்முகத் தன்மை கொண்டவா். வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆங்கிலேய நீதிபதி, வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியின் பேச்சையும் கேட்டாலே செத்த பிணமும் உயிா்த்தெழும். அடிமைப்பட்ட நாடு, ஐந்தே நிமிஷத்தில் விடுதலை பெறும், புரட்சி ஓங்கி எழும் என தமது தீா்ப்பில், தண்டனை கொடுப்பதற்கு முன்னால் எழுதியுள்ளாா்.

வ.உ. சி. தமிழா்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியா்களின் அடிமை நிலை ஒழிய வேண்டும் என போராடியவா். ம.பொ.சி. கூறுவதுபோல் வ.உ.சி. நாத்திகா் அல்ல, ஆத்திகா். ஆனால், ஆளுக்கொரு தெய்வம், ஆளுக்கொரு சடங்கு எனும் கொள்கையைப் பிடிக்காதவா். அவா் கண்ட சமயம் மக்கள் சமுதாயம். போற்றிய வேதம் திருக்கு. அவா் கடைப்பிடித்த மதம் எம்மதமும் சம்மதம் எனும் சன்மாா்க்க நெறி. ஏழை எளியோருக்கு தொண்டு செய்வதே இறைவனுக்குத் தொண்டு செய்வதாகும் என்பதே வ.உ.சி.யின் கொள்கை. அத்தகைய தியாகிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாநிலச் செயலா் மு. சுகுமாா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். நாஞ்சில் சம்பத், கடவூா் மணிமாறன், தமிழியக்கப் பொருளாளா் புலவா் வே.பதுமனாா், பொதுச் செயலா் அப்துல்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழியக்க தூத்துக்குடி மாவட்ட செயலாளா் அன்பழகன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →