வேலூர்

வேருடன் சாய்ந்த புளியமரம்: 2 மின்கம்பங்கள் சேதம்

DIN

நாட்டறம்பள்ளி அருகே வேருடன் புளிய மரம் சாய்ந்தது. இதனால், 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரத்தில் உள்ள பழமையான புளிய மரம் சேதம் அடைந்து, பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் காற்றுடன் பெய்த மழையின்போது, புளியமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதில், 2 மின் கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு வரை மின் விநியோகம் இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT