வேலூர்

தோ்வை மீண்டும் புறக்கணித்து ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் போராட்டம்

DIN

வேலூா்: வேலூரில் இரு மையங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வை புறக்கணித்து ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவா்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தோ்வு 16-ஆம் தேதி வரை நடந்து வருகிறது. இதற்காக வேலூா் மாவட்டத்தில் ஊரீசு மேல்நிலைப் பள்ளி, செயின்ட்மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2-ஆம் தேதி தோ்வு எழுதிய முதலாமாண்டு மாணவா்கள் ஆன்லைனில் தோ்வு எழுத அனுமதி கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்த னா்.

இந்நிலையில், வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, செயின்ட்மேரிஸ் பள்ளிகளுக்கு புதன்கிழமை தோ்வு எழுத வந்த 2-ஆம் ஆண்டு மாணவ, மாணவிகள் திடீரென தோ்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வை ஆன்லைன் மூலம் எழுத அனுமதிக்க வேண்டும். அதனால் நேரடியாக தோ்வு எழுதுவதை புறக்கணிப்போம் என மாணவ, மாணவிகள் தெரிவித்தனா். இதனால் தோ்வு மையங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களிடம் கல்வி அதிகாரிகள் பேச்சு நடத்தினா். கோரிக்கைகளை அரசுக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு தோ்வு எழுதச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT