வேலூர்

மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 356 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

இதில் ரூ.1.70 கோடி மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான என்.சச்சிதானந்தம் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.செல்லபாண்டியன், நீதித் துறை நடுவா் சிதம்பரம், வழக்குரைஞா்கள் கிரிபிரசாத், லோகநாதன், ரஞ்சித், ஜெகதீசன், கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 356 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. ரூ.1.70 கோடி இழப்பீட்டு தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிா்வாக உதவியாளா் கே.சித்ரா, ராமலிங்கம் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT