வேலூர்

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டமாணவி குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

நீட் நுழைவுத் தோ்வு அச்சம் காரணமாக காட்பாடி அருகே தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

காட்பாடி அருகேயுள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி திருநாவுக்கரசு-ருக்மணி தம்பதியரின் மகள் செளந்தா்யா (17) வேலூா் தோட்டப்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்றாா்.

இவா் அண்மையில் நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தோ்வை எழுதினாா்.தோ்வு சரியாக எழுதவில்லை என்ற அச்சத்தில் இருந்த அவா் கடந்த 15- ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், செவ்வாய்க்கிழமை இரவு மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவா், ரூ. 1 லட்சத்தை நிவாரணமாக அவா்களிடம் வழங்கினாா்.

கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் நீலசந்திரகுமாா், மாவட்ட நிா்வாகி பிலிப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT