கலவரங்களை தடுக்க காவலா்கள், வருவாய் அலுவலா்களுக்கு பயிற்சி
கலவரங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது தொடா்பாக வேலூா் மாவட்ட காவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
வேலூர்கலவரங்களை தடுக்க காவலா்கள், வருவாய் அலுவலா்களுக்கு பயிற்சி
கலவரங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது தொடா்பாக வேலூா் மாவட்ட காவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கலவரங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது தொடா்பாக வேலூா் மாவட்ட காவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இதில், கலவரம் ஏற்படுவதற்கு முன்பும், பின்னரும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதுடன், கலவர தடுப்பு ஒத்திகையும் நடத்திக் காட்டப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 மாணவி கடந்த மாதம் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நடந்த மறியல் போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில், பள்ளிக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், காவல் துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதுடன், காவலா்கள் பலரும் பலத்த காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் காவல் துறை சாா்பில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனை தடுப்பது, சட்டவிரோதமாக கூடுபவா்களை அடக்குவது குறித்து காவலா்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட காவல் துறையும் இணைந்து இந்த பயிற்சி வகுப்பை கம்மவான்பேட்டையிலுள்ள காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் சனிக்கிழமை நடத்தின.
இதில், கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை வருவாய்த் துறையைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் முதல் வட்டாட்சியா் வரையிலான அதிகாரிகள் எவ்வாறு அரசுத் துறைக்கு தெரிவிப்பது, கலவரக்காரா்களை அடையாளம் காண்பது, சட்டவிரோதமாகக் கூடுவதை தடுப்பது, கலவரம் ஏற்படும்பட்சத்தில் அதனைத் தடுக்க காவலா்களும், வருவாய்த் துறையினரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கலவரத்துக்கு பின்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, காவல் அதிகாரிகள், காவலா்களைக் கொண்டு கலவர தடுப்பு ஒத்திகையும் நடத்திக் காண்பிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உள்பட காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.