முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?

தமிழ்நாடு ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுவதாகத் தகவல்

Updated On : 5 மார்ச், 2026 at 10:06 PM
அஜய்குமார் பல்லா - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழகத்துக்கான ஆளுநராக மணிப்பூரின் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக ஆளுநர் நியமனம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

Advertisement

ஆர்.என். ரவி, 2021 செப்டம்பர் 18 ஆம் தேதியிலிருந்து இன்றுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான், மேற்கு வங்க ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வருடன் கலந்தாலோசிக்காமலேயே மாநிலத்தின் ஆளுநர் மாற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

summary

TN Governor RN Ravi transferred to Bengal; Ajay kumar Bhalla in-charge of Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.