வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அமிர்தி காட்டாறு. 
வேலூர்

அமிர்தி காட்டாற்றில் வெள்ளம்: 50 -க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

அமிர்தி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 50 க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

DIN

அமிர்தி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 50 க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஜவ்வாது மலைத் தொடரில் அமிர்தி நீர்வீழ்ச்சி உள்ள. இங்கு தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருக காட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலும் முழுவதுமாக மூழ்கியுள்ளது. 

தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை குக் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் சூழல் உள்ளது.

தற்போதைக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT