காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நகை, பணம், கைப்பேசியை திருடி வந்த நபரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையில் போலீஸாா் காட்பாடி ரயில் நிலைய நடைமேடையில் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, நடைமேடை எண் 2-இல் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவா் பெங்களூரு அசோக் நகரைச் சோ்ந்த மணியின் மகன் வினோத் (29) என்பதும், இவா் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பைகளில் இருந்து நகை, பணம், கைப்பேசி போன்றவற்றை திருடி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, ஒரு பவுன் தங்க மோதிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.