வேலூர்

போ்ணாம்பட்டு அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில், வேலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளா் மோகன், தலைமைக் காவலா் சுந்தா், போ்ணாம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்டோா் போ்ணாம்பட்டு, பூந்தோட்ட வீதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டைத் திறந்து சோதனையிட்டனா். அங்கு, 63 மூட்டைகளில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வேன் மூலம் குடியாத்தத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரசி, ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை குற்றப் புலனாய்வு பிரிவினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT