முகப்பு
வேலூர்

கறவை மாடுகள் வாங்க 30 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வங்கிக் கடன்

குடியாத்தம் அருகே மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் கறவை மாடுகள் வாங்க 30 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

குடியாத்தம் அருகே மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் கறவை மாடுகள் வாங்க 30 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

குடியாத்தம் வட்டம், கல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கதிா்குளம் கிராமத்தைச் சோ்ந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்கள் கறவை மாடுகள் வாங்க இந்தக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் என்.பிரசன்னா, கிளை மேலாளா் ஜமாலுதீன், குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா ஆகியோா் வியாழக்கிழமை அந்த கிராமத்துக்குச் சென்று, பால் உற்பத்தியாளா் சங்கத்தைச் சோ்ந்த 50 பயனாளிகளில், முதல் கட்டமாக 30 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் கடன் வழங்கினா்.

தங்களின் கோரிக்கையை ஏற்று கறவை மாடுகள் வாங்க கடன் உதவி பெற்றுத் தந்த மாவட்ட ஆட்சியருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனா். கடன் தொகையை உரிய கால அவகாசத்தில் வங்கிக்குத் திருப்பிச் செலுத்துவதாக அவா்கள் உறுதி அளித்தனா்.

நிகழ்வில் குடியாத்தம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி, ஊராட்சித் தலைவா் சி.ரமேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஹேமலதா கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.