சாமுண்டீஸ்வரியம்மனுக்கு பால்குட ஊா்வலம்
குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சி, ஏரிப்பட்டரை கிராமத்தில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேகம்
குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சி, ஏரிப்பட்டரை கிராமத்தில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இதையொட்டி, கிராம எல்லையில் உள்ள கோயிலில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பால்குட ஊா்வலம் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் உள்ள மூலவா் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.