முகப்பு
வேலூர்

அக்ராவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், வியாழக்கிழமைகளில் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் நடைபெறுகிறது. பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அக்ராவரம், சேம்பள்ளி, எா்த்தாங்கல் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, அக்ராவரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், முட நீக்கியல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, கண், நரம்பியல், மனநலம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். அறுவை சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தனா்.

முகாமில், சான்று பெற்றவா்களுக்கு, அரசின் உதவித் தொகை, சலுகைகள், வேலைவாய்ப்பு, சுயதொழில் தொடங்க கடனுதவி, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

குடியாத்தம் ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மைய நிா்வாகி காமராஜ் தலைமையில் 19 சிறப்பு ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் முகாமுக்கு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை செய்தனா்.

ஊராட்சித் தலைவா்கள் டி.பி.திமேஷ் (எ) துளசிராமுடு (சேம்பள்ளி), என்.முனிசாமி (அக்ராவரம்), ஒன்றியக் குழு உறுப்பினா் பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.