அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையொப்பம்! யார் யாருக்கு எவ்வளவு?
தே.ஜ. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையொப்பானது பற்றி...
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பானது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு கையொப்பானது.
Advertisement
Advertisement
பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இதையடுத்து, பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுடன் இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்று அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் சிறிய கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளார்கள் என்பது குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AIADMK - BJP seat sharing agreement signed! Who gets how much in NDA?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.