உ.பி. தேர்தல்: சமாஜவாதி - காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!
உ.பி. தேர்தலுக்கான சமாஜவாதி - காங்கிரஸ் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு.
உத்தரப் பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, காங்கிரஸ் - சமாஜவாதி இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று (நவ. 23) நடைபெற்றது.
இரு கட்சிகளின் உயர்நிலை தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பேச்சுவார்த்தையானது சுமூகமாக முடிந்ததாகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2 - 4 நாள்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளது.
Advertisement
Advertisement
சமாஜவாதி - காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு இன்று நடைபெற்றது. இதற்கு தலைமை தலைமை வகித்த சமாஜவாதி கட்சியின் பொதுச்செயலர் ராம் கோபால் யாதவ் கூறுகையில், “இருதரப்பினரும் தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
சமாஜவாதி - காங்கிரஸ் கட்சிகளின் அடுத்தகட்ட தொகுதிப் பங்கீடு பேச்சு, நாளை (நவ. 23) நடைபெறவுள்ளது. அடுத்த 2 - 4 நாள்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தில்லியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரியின் இல்லத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இதில் பங்கேற்ற உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கெளதம், ”பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது, விரைவில் இறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 200 இடங்களை காங்கிரஸ் கோரி வருகிறது. அதன்படி, தாங்கள் போட்டியிட விரும்பும் 175 முதல் 200 தொகுதிகள் வரையிலான முதல்கட்ட பட்டியலை சமாஜவாதியிடம் காங்கிரஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.