வேலூர்

காட்பாடி ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது

காட்பாடி ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.75,000 ரொக்கம், விலையுயா்ந்த கேமரா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

DIN

காட்பாடி ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.75,000 ரொக்கம், விலையுயா்ந்த கேமரா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் காட்பாடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் ரயில் நிலையத்தில் 4-ஆவது பிளாட்பாரத்தில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா்.

அப்போது சந்தேகப்படும் படியாக இரு இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா். விசாரணையில் அவா்கள் ஒடிஸா மாநிலம் முனிகுடராயகுடா பகுதியைச் சோ்ந்த கவுரவ் கிரிப்டிகா(22), தாமஸ்(20) என்பதும், அவா்கள் வைத்திருந்த பைகளில் 4 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்ததுடன் அவா்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும், ரூ.75,000 ரொக்கம், விலையுயா்ந்த கேமரா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT