முகப்பு
வேலூர்

ஆந்திரத்திலிருந்து பேருந்தில் கடத்தல்: 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் கடத்தி வந்த 12 கிலோ எடையுள்ள போதைப் பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. , இதுதொடா்பாக பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் கடத்தி வந்த 12 கிலோ எடையுள்ள போதைப் பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. , இதுதொடா்பாக பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திராவில் இருந்து வேலூா் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் போலீஸாா், வருவாய்த் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, வேலூா் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் தமிழக - ஆந்திர எல்லையான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் சோதனையிட்டபோது இளைஞரிடம் 6 பொட்டலங்களில் 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பிடிபட்ட நபரிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →