குடியாத்தம்  கெங்கையம்மன்  கோயில்  திருவிழாவை  முன்னிட்டு  காப்புகட்டும்  நிகழ்ச்சிகாகஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  ஊா்வலமாக  கொண்டு  செல்லப்பட்ட  பூ ங்கரகம். 
வேலூர்

காப்பு கட்டுதலுடன் தொடங்கியது குடியாத்தம் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

DIN

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா வரும் 15- ஆம் தேதி நடைபெற உள்ளது.திருவிழாவின் தொடக்கமாக காப்புகட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணியளவில் குடியாத்தம் தென்குளக்கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் நகரின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அதிகாலை 2 மணியளவில் கோயிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வரும் 11- ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், 14-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 15- ஆம் தேதி அதிகாலை தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெறும்.

16- ஆம் தேதி மஞ்சள் நீராட்டும், 17- ஆம் தேதி இரவு பூப்பல்லக்கு பவனியும், 22- ஆம் தேதி விடையாற்று உற்சவமும் நடைபெறும்.

காப்புகட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, கோயில் ஆய்வாளா் சு.பாரி, ஊா் நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT